முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதான முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை முன்னெடுக்கப்பட்டது.
இதில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன், பிரதேச சபை உறுபரபினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.