எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட முயற்சிப்பதாக ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்;டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற செய்தியை மக்கள் தேர்தலின் ஊடாக வழங்கியுள்ளனர். அதற்கமையவே அனைவரும் செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் சிங்கள கட்சிகளின் ஆதிக்கம் வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



