‘அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்ப புத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம்’ – ஜனாதிபதி

போரின் தீப்பிழம்புகளிலிருந்து நீங்கி, அமைதி நிறைந்த உலகில், அனைத்து நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதி, அபிவிருத்தி மற்றும் கௌரவத்தை உருவாக்க, பௌத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாம் நாட்டுக்கு விஜயம் செய்தபோது அந்நாட்டின் ஹோ சி மின் நகரில் செவ்வாய்க்கிழமை (6) ஆரம்பமான 20ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதான உரையாற்றியபோது இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.