நீண்ட காலமாக பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று மாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் படி ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
தற்போது வரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான சபைகளை கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. மாறாக தமிழர் தேசம், தமிழ் கட்சிகளுக்கே மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



