நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான கப்பல் சேவையின் கட்டணம் குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு வாரம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8 ஆயிரத்து 500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கப்பலில் பயணிப்பவர்கள் கொண்டு செல்ல கூடிய பொருட்களின் நிறை 10 கிலோகிராமிலிருந்து 22 கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.