தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் : சாணக்கியன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் அரசியல் தீர்வு என்பது ஒரு முக்கியமான விடயமாகும். நிரந்தரமான அரசியல் தீர்வு என்பது சமஸ்டி முறையில் கிடைக்க வேண்டும் என்பதையே எமது கட்சி கூறிவருகிறது.

எனவே தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை கேட்கவில்லை என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது.
தற்போது வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் தேசிய மக்கள் சக்தியினுடைய கவனம் கூடுதலாக செலுத்தப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் கடந்த 6 மாதங்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.