உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் விசாரணை மேற்கொள்வதற்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.