சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஒருவரை இலங்கை தமிழரசுக் கட்சி, அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 16 சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அதிகாரி அலன்டீலன் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறார்கள் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். பல சிறார்களை அவர் அச்சுறுத்தி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவராக இருந்த நிலையில், அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.



