எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகின்றன.
நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி சுமார் 250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அதேவேளை, தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வழக்கின் விசாரணைக்குப் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏறத்தாழ 100 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுமா என்பதில் நிச்சயமில்லாத நிலை இருப்பதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளனர்.