தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை, தமிழ் தேசியத்துக்கு முரணாக உள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பதை போன்றே கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த ஏனைய கட்சிகளையும் எதிர்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை தமிழ் தேசியத்துக்கு விரோதமாக காணப்படுவதனாலேயே அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோருகிறோம்.
பேரினவாத கொள்கைகளை முன்கொண்டு செல்வதனாலேயே தெற்கிலே உள்ள பேரினவாத கட்சிகளை எதிர்க்கிறோம். மொட்டுக்கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் கடந்த காலங்களில் எதிர்த்ததை போன்றே தற்போது தேசிய மக்கள் சக்தியையும் எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.