நாமல் கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது – சீமான்

தமிழக அரசியல்வாதிகள் ஈழத் தமிழர்களை தங்கள் அரசியலில் பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றார்கள் என நாமல் ராஜபக்ஸ வெளியிட்ட அறிக்கைக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:

தமிழர், சிங்களவர் என்னும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்த ராஜபக்ஸவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை வான்வழித் தாக்குதலின் மூலம் வீசி, ஒரு உள்நாட்டுப் போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஸவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்கு பாடமெடுப்பது நகைப்பிற்குரியது.

இந்திய வல்லாதிக்கப் பேரரசும், சிங்கள இனவாத அரசும் உலகின் பல்வேறு நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஈழ நிலத்தில் நிகழ்த்திய கோர இனப்படுகொலை முடிந்து பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்படவில்லை. தற்போது நடைபெற்று முடிந்திருக்கின்ற இத்தேர்தலால் எவ்வித மாற்றமும் அந்நிலத்தில் நிகழப்போவதில்லை என்பதைத்தான் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகின்றேன். அதனையேதான் தமிழக அரசியல் தலைவர்களும் கூறியிருக்கின்றனர். சிங்கள இனவாதிகளுக்கு இடையேயான போட்டியில் எவர் வென்றாலும் அது தமிழர்களுக்கு எவ்வித பலனையும் தரப்போவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்ஸ அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்ட காலமாகும். இந்த ஆட்சி மாற்றம் பெரும் அச்சுறுத்தலையும், கலக்கத்தையும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் அது மிகையில்லை.

இலங்கையின் இரண்டாம் தரக் குடிமக்களாகத் தமிழர்கள் நடத்தப்பட்டு, சிங்களக் குடியேற்றங்களும், சிங்கள மயமாக்கலும் வீரியம் பெற்று தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களும், அடக்கு முறைகளும் இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தாது, ஊக்குவித்து வளர்த்துவிடும் சிங்கள அரசியல் தலைமைகள் ஒருபோதும் தமிழர்களின் நலனையும், நல்வாழ்வையும் விரும்பாது என்பதைக் கடந்தகால நிகழ்வுகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். இறுதிக்கட்ட ஈழப் போரில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல் கேட்டு குடும்பத்தாரும், உறவினர்களும் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஒரு தீர்வினையும் சொல்ல மறுக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள்.

கோத்தபயா ராஜபக்ஸ பதவியேற்றவுடனே தனக்கு வாக்களிக்காத தமிழர்கள் மீது தனது ஆதரவாளர்களை ஏவித் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பதாக வரும் செய்திகளைப் பன்னாட்டு சமூகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் சுட்டிக்காட்டுகின்றேன். தமிழர் தாயகத்தை முற்றுமுழுதாக சிதைத்தழித்து சிங்களமயமாக்கலின் மூலம் முழுவதுமாகத் தமிழர்களை அழித்தொழித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் சிங்கள இனவெறியர்களின் ஒரே நோக்கமாகும்.

மற்றும் அவர்கள் சனநாயக ரீதியிலான நியாயமான தீர்வுகளுக்கு உடன்படத் தயாராக இல்லை என்பதைத் தான் அவர்களது கடந்தகால நடவடிக்கைகள் எடுத்துரைக்கின்றது. குறைந்தபட்சம், வடகிழக்குப் பகுதியைத் தமிழர் தாயகமாக அறிவித்து, 13ஆவது சட்டத்தை திருத்தி அமுல்ப்படுத்தி குறைந்தபட்ச அதிகாரத்தைத் தமிழர்கள் வசம் வழங்கக்கூட சிங்களப் பேரினவாதிகள் தயாராக இல்லை என்பதன் மூலம் அவர்களது இனவெறியையும், இன ஒதுக்கலையும் அறிந்து கொள்ள முடியும்.

ஒற்றை நாட்டில் ஒருமித்து சிங்களவர்களோடு தமிழர்கள் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்கிற தமிழர்களின் மனநிலையைத்தான் நடந்து முடிந்திருக்கின்ற தேர்தல் பிரதிபலித்திருக்கின்றது. இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ இந்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர் என்பது மட்டுமல்ல. சீனாவின் ஆதிக்கத்திற்கு துணைபோகின்றவரும்கூட. அவரது சீன ஆதரவு செயற்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கே பேராபத்தினை விளைவிக்கக்கூடும் என்பதை உணர்ந்து, இனியாவது இந்தியப் பேரரசு தார்மீகத்தோடு தமிழர்கள் பக்கம் நிற்க முன்வர வேண்டும்.

ஆகவே, உலகத் தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையான ஈழ இனப்படுகொலைக்குத் தலையீடற்ற ஒரு பன்னாட்டு பொது விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து தனித் தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஆகியவைகள் நடத்தப்படுவதற்கான ஒரு சூழலை இந்திய அரசும், பன்னாட்டுச் சமூகமும் ஏற்படுத்தித, துயருற்று இருக்கின்ற தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகின்றேன். இவ்வாறு சீமானின் அறிக்கை அமைந்துள்ளது.