சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­து – பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்பு ­ குழு

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர்.

இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை அர­சாங்கம், அர­சியல் கட்­சிகள், தேர்­தல்கள் ஆணைக்­குழு மற்றும் மக்­க­ளுக்கு அந்த அறிக்கை கிடைக்கச் செய்­யப்­படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்,

ஒரு நம்­ப­க­மான ஜன­நா­யக செயன்­முறை என்­பது இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும், பத்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தற்­கான உரி­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­கின்ற, சக­ல­ருக்கும் இடம்­த­ரு­கின்ற ஒன்­றாக இருக்­க­ வேண்டும். எதிர்­கா­லத்தில் இலங்கை சமூ­கத்தின் சகல பிரி­வி­ன­ரையும் அர­வ­ணைக்­கக்­கூ­டிய முறையில் தேர்­தல்­களை நடத்­தக்­கூ­டி­ய­தாக மேம்­பா­டு­களைச் செய்­ய­ வேண்டும் என்று இலங்கை மக்­க­ளையும், அர­சியல் தலை­வர்­க­ளையும் கேட்­டுக்­கொள்­கிறோம்.

இலங்­கையின் செழிப்­பான கலா­சார மற்றும் பன்­மைத்­துவம் மதிக்­கப்­பட வேண்டும். கொண்­டா­டப்­பட வேண்டும். சமூக ஒன்­றி­ணை­விற்கும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்­கிற்கும் முன்­னு­ரிமை அளிக்­கு­மாறு சகல அர­சியல் தலை­வர்­க­ளையும் வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொள்­கின்றோம்.

தேர்­த­லுக்கு முன்­ன­ரான நாட்­களில் இன மற்றும் மத பதற்ற ­நி­லையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சில குழுக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­ன­தையும் நாங்கள் அவ­தா­னித்தோம். ஐக்­கி­யத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கு­மாறும், அர­சியல் வாழ்வில் மதிப்பு மற்றும் சகிப்­புத்­தன்மை பண்­பு­களை வெளிக்­காட்­டு­மாறும் அர­சியல் மற்றும் சிவில் சமூ­கத்­ த­லை­வர்­க­ளையும், சகல பிர­ஜை­க­ளையும் கோரு­கின்றோம்.

தனியார் ஊட­கங்கள் ஊடா­கவும், சமூக ஊட­கத்­த­ளங்கள் மூலமும் வெறுப்புப் பேச்­சுகள் ஊக்­கப்­ப­டுத்­தப்­பட்­டமை விச­னத்­திற்­கு­ரிய மற்­றொரு அம்­ச­மாகும். பிர­சா­ரங்கள் முடி­வ­டைந்த பின்­ன­ரான 48 மணித்­தி­யால நேரத்­திற்­குள்ளும் கூட இந்த வெறுப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்கள் தொடர்ந்­ததைக் காண­ மு­டிந்­தது.

ஒரு தொகுதி ஊடக வழி­காட்­டல்கள் ஊடாக அர­சாங்க ஊட­கங்­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை தேர்­தல்கள் ஆணைக்­குழு கொண்­டுள்­ளது. ஆனால் தனியார் ஊட­கங்கள் பெரு­ம­ள­விற்கு ஒழுங்­க­மைக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. அடுத்த தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு சட்­ட­ரீ­தி­யான கட்­ட­மைப்பின் ஊடாக தனியார் மற்றும் அர­சாங்க ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும். இது ­கு­றித்து எமது இறுதி அறிக்­கையில் விரி­வாகக் கூறுவோம்.

இலங்­கையின் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு குறை­வாக இருப்­பது மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும். இந்த ஜனா­தி ­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட 35 வேட்­பா­ளர்­களில் ஒருவர் மாத்­தி­ரமே பெண் வேட்­பா­ள­ராவார். உள்­ளூ­ராட்சி மட்­டத்தில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட ­ஒ­துக்­கீட்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூலம் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு விட­யத்தில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தேசிய மட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும்.