அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது பலனளிக்கப் போவதில்லை’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், ‘அமெரிக்காவுடனான கொடுக்கல் வாங்கல் செயற்பாடே பலனளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அதேநேரம் அவ்வாறான கொடுக்கல் வாங்கல் முறைமைக்கு அரசாங்கம் செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகிறது’.
‘இதேவேளை அரசாங்கத்தில் உள்ள பலர் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் நோக்கி செல்ல முடியும் என கூறுகின்றனர்’. ‘எனினும் இலங்கைக்கு தொடர்ந்து ஜி.எஸ்.பி.பிளஸ் கிடைக்குமென எதிர்பார்க்க கூடாது’ என்று பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
‘2010ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை கடுமையான முயற்சிகளின் பின்னர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் கிடைத்தது’. ‘எனவே, அதனை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டுமாயின் இலங்கை பல பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது உள்ள இணக்கப்பாடு இந்த மாத இறுதியில் நிறைவடையவுள்ளதுடன் அது தொடர்பான கலந்துரையாடலுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது’.
‘அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பாரிய கரிசனை கொண்டுள்ளனர்’ என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
‘அதேநேரம் நல்லிணக்கம் தொடர்பில் ஜெனீவாவில் ஏற்றுக் கொண்ட விடயங்கள் தொடர்பில் நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்படும்’. ‘இதன்படி, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை’. ‘அண்மையிலும் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராகவே அரசாங்கம் கருத்துரைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போகும் நிலை காணப்படுகிறது.
‘இந்தநிலையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்காக புதிய விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனை பெறுவதாயின் அதற்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்’ என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிதாக விண்ணப்பங்களை முன்வைத்து அதனை பெற்றுக் கொள்வது இலகுவான விடயமல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.



