13ஆம் திருத்தம் தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஆராயப்பட மாட்டாது: கடற்றொழில் அமைச்சர்

‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இலங்கை விஜயத்தின் போது 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாகவோ மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ அவதானம் செலுத்த மாட்டார்’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

வட மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிகளுடன் நேற்று (03) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘தேவை என்றால் வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரமருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட முடியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சந்திப்புகளின் ஊடாக தமிழ் தலைவர் சுயதிருப்தியடைய முடியும்.
மாறாக அவ்வாறான பேச்சுவார்த்தைகளின் ஊடாக எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று   (04) இலங்கை வரவுள்ளார்.