நிதி மோசடி குற்றச்சாட்டில் அருண் தம்பிமுத்து கைதானார்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டிருந்த அருண் தம்பிமுத்து பல கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் வசிக்கும் முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  கனடாவில் இருக்கும் முதலீட்டாளர் ஒருவர் மட்டக்களப்பில் இறால் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 10 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதில் 4 கோடி ரூபா பணம் அருண் தம்பிமுத்துவிடம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மொத்தப் பணத்தினையும் அருண் தம்பிமுத்து மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.