கொழும்பை வந்தடைந்த ஜப்பானிய கப்பல்கள்!

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) புங்கோ மற்றும் இடாஜிமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை (01) நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இந்த கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளன.

உராகா-கிளாஸ் மைன்ஸ்வீபர் டென்டர் வகைக்கு சொந்தமான புங்கோ (JMSDF Bungo) கப்பல் 141 மீட்டர் நீளமுடைய மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும். கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் டனாகா கோஜி பணியாற்றுகிறார்.

அதேவேளை, இடாஜிமா (JMSDF Etajima) கப்பல் 65 மீட்டர் நீளம் கொண்டது. கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஒடா டாகாயுகி பணியாற்றுகிறார். 54 அங்கத்தவர்களை கொண்டதாகும்.

இந்த கப்பல்களானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை (04) நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.