யாழ்ப்பாணம் மாநகரசபை உட்பட 336 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் திகதி இன்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்றுப் புதன்கிழமை மதியத்துடன் நிறைவுபெற்றுள்ளது. வேட்புமனுக்கள் இன்று மதியம் வரையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு ஏற்பு நிறைவுபெறும். ஆட்சேபனைக்கு ஒரு மணிநேரம் வழங்கப்படும். அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவால் ஊடகச் சந்திப்பு ஊடாக தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 35 நாள்களுக்குப் பிறகே தேர்தலுக்குரிய நாள் அமையவேண்டும். அந்தவகையில் ஏப்ரல் 26ஆம் திகதி தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று தெரியவருகின்றது.



