06. கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரும் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் இன்றைய தினம் (17) மஹர நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் சட்டவிரோத சொத்து விற்பனை வழக்குடன் தொடர்புடைய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, களனி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாராளுமன்ற செயலாளர் சரத் குமார எதிரிசிங்க ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



