முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இந்த அரசியல் கட்சியில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
கட்சியின் புதிய சின்னம் மற்றும் பெயர் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதால் அதனை சீர்செய்ய நீண்டகாலம் தேவைப்படும் என்பதாலும் அரசியலில் ஈடுபட நிரந்தர தளம் ஒன்று தேவை என்பதாலும் இந்த புதிய அரசியல் கட்சியை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அரசியல் கட்சியில் புதிய முகங்களை அறிமுகப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.



