சம்பூரில் “திசைகாட்டி” குத்துக்கரணம்: பா.அரியநேத்திரன்

ஆரம்பத்தில் இருந்து சம்பூர் அனல் மின்னி லையத்தை எதிர்த்துவந்த ஜே வி பியினர் ஆட்சி யில் உள்ளதால் அரசியல் குத்துக்கலணம் அடித்துள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்பொதுவேட்பாளராக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இலங்கையில் ஐந்தாம் நிலையை பெற்றவரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மத்திய குழு உறுப்பினரும்,தமிழ்தேசியவாதியுமான பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,
அடுத்த மாதம் ஏப்ரல் 4,ல், இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சம்பூரில் ஆரம்பிக்கப் படவுள்ள  சூரிய மின்சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கடந்த 2024, டிசம்பர்,15, ல்,இந்தியாவில் சென்று  பாரதப்
பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்ததன் பேரில் இந்தியத் தலைவர் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி இரண்டு நாள் பயணமாக இலங்கைவந்து திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்திற்கான அடிக்கல்லை நடவுள்ளார்.
இலங்கை, இந்திய மின் கட்டமைப்புகள் இணைப்பு உட்பட எரிசக்தி இணைப்பு என பல் வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்கள் கலந்து ரையாடியிருந்தனர். அதன் ஆரம்பகட்ட மாக சம்பூர்  திட்டம் அமையவுள்ளது அமையவுள்ளது.
எதிர்த்தவர்களே அழைத்து அனல் மின்னிலை யத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள். இந்த திட்டத்திற்
கான ஆரம்பம் 2002ஆம் ஆண்டு முதல் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பான பேச்சுகள் இலங்கை, இந்தியா இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்ததன் பின்புலத்திலேயே தற்போது அத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்து கடந்த 2023, வரை தொடர்ச்சியாக எதிர்த்துவந்த ஜே வி பி கட்சி தற்போதய தேசியமக்கள் சக்தி கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் அநுரா ஜனாதிபதியாகி 159, ஆசனங்களுடன் ஆட்சியமைத்தபின்னர் அவர்களின் நிலைப்பாடு முற்றாக மாறி குத்துக்கரணம் அடிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
தாமே அன்று எதிர்து தாமே இன்று ஆதரித்து இந்தியப்பிரதமர் மோடியை கொண்டு சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்தை முன்எடுக்கப்போவதானது இவர்களின் இரட்டை வேடத்தை கொடிட்டு காட்டு கிறது.
தாங்கள் ஆட்சியில் இல்லை எனில் எதிர்பதும், ஆட்சியில் இருந்தால் எந்த கெடுதல் திட்டம் என்றா லும் ஆதரிப்பது  என்பது இலங்கை அரசியலில் ஆட்சிய மைத்த அனைத்து கட்சிகளின் நிலைமையே தேசிய மக்கள் சக்தி அரசும் செய்கிறது.
ஐக்கியதேசியகட்சி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுசன பெரமுனை , ஐக்கியமக்கள் சுதந்திர கட்சி எல்லா கட்சிகளைப்போலே சிவப்பு சாயம் பூசிய தேசிமக்கள் சக்தியும் செயல்படுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். சம்பூர் அனல் மின்நிலையம் அமைப்பது தொடர் பாக தமிழ் மக்கள் மத்தியிலோ, தமிழ்த்தேசிய கட்சிகள் மத்தியில் எதிர்பு கிடையாது ஆனால் தேசிய மக்கள் சக்தியின் இரட்டை நிலைப்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியா வின் தேசிய அனல் மின்உற்பத்தி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம் பிக்கவுள்ளன. திட்டத்தின் ஊடாக 130 மெகா வோல்ட் மின் உற்பத்தி இடம்பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.