தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகத்தை விடுவிக்கமாறு ஆளுநரிடம் கோரிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு தற்போது இராணுவத்தினரின் வசமுள்ள நீச்சல் தடாகத்தை விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடன் கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள விளையாட்டுடன் தொடர்புடைய சங்கமொன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீச்சல் பயிற்சிகள் கடலில் நிகழ்த்தப்பட்ட போதிலும் மாவட்டத்தில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு வளமான நீச்சல் தடாகம் ஒன்று இரணைப்பாலை பகுதியில் உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமல்லாது ஏனைய மாவட்ட வீரர்களும் பயன்படுத்தும் வகையில் அந்த நீச்சல் தடாகத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் தடாகம் தமிழீழ விடுதலைப்புலிகளால் நீச்சல் பயிற்க்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்றாகும்.
அது இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தற்போதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.