எல்லை தாண்டும் இந்திய  இழுவைப் படகுகள்:   யாழில் போராட்டம்!

இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத  அடாவடி இழுவைபடகு தொழில் நடவடிக் கையை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27ஆம் திகதியன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்று முன் னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்பு  அறிவித்துள்ளது.
குறித்த அமைபினர்  மேலும் கூறுகையில்; ‘’இந்திய மீனவரின் சட்டவிரோத இழுவைமடி தொழில் நடவடிக்கையானது யாழ். வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தை கடுமையாகப் பாதித்து வருகின்றது. இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக் கைகளை முன்வைத்தாலும்  அதற் கான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் எமது வாழ்வுரி மைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினா தீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் எமது இந்த போரட்டம்  யாழ். பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல வுள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு மனு ஒன்றும் வழங்கவுள்ளோம்.
எமது இந்த போராட்டத்துக்கு யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுகின்றோம்‘’