இலங்கை கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில்  இந்திய  மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் நாடு- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.