அநுர அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் – இன்று தாக்கல்

ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க தலைமையிலான அர சாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை (17.02.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகை யில் ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்கவே வரவு – செலவுத் திட்ட த்தை தாக்கல் செய்ய உள்ளார்.
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளமையால் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.