ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தலை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்காக குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.
இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இரு கட்சிகளினதும் சார்பில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.’எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்படாத தரப்பினரும் கலந்துரையாடல்களில் பங்கேற்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
குறிப்பாக கலந்துரையாடல்களுக்காக நியமிக்கப்படாத தரப்பினர், கலந்துரையாடல்களில் பங்கேற்று சின்னம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
‘அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் மாத்திரம் இணைவது தங்களது நோக்கமல்ல’ என்றும், ‘சரியான தரப்பினருடன் இணைவதே தங்களது நோக்கம்’என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.



