06. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாதிருக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில் இருந்துக் கொண்டு தேர்தல் பிரச்சார மேடையேறுவது பொறுத்தமற்றது’ என்பதை ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்துக் கொள்ளவுள்ளார்.
அத்துடன் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பொது மக்கள் கூட்டத்திலும் அவர் கலந்துக் கொள்ளவுள்ளார்.
அதேநேரம் ‘உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் நடத்தப்படும்’ என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ‘உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



