தொடர்ந்து பதவி விலகும் அரச நிறுவனங்களின் பிரதானிகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சிந்தக டி. ஹேவாபத்திரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அண்மைய நாட்களில் புதிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும் நான்வது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக ஜனவரி 29ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன பதவி விலகினார். அவை தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சேனேஷ் திசாநாயக்க பண்டார சமீபத்தில் விலகினார்.

இதற்கிடையில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம். ரணதுங்க நேற்று முன்தினம் (30) ராஜினாமா செய்தார். இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான இரண்டு பிரதம செயலாளர்கள் ஜனாதிபதியின் நேற்று (31) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக டி.ஏ.சி.என்.தலங்கம நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜே.எம்.ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.