அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் முவ்வாயிரம் இலங்கையர்கள்

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,445,549 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பட்டியல் ஒன்றை அவர்கள் தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.