ஏமனின் குதீஸ் அமைப்பினை பயங்கர வாதிகளாக அறிவிக்க அமெரிக்கா திட்டம்?

ஏமனில் உள்ள குதீஸ் அமைப் பினரை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் நடைமுறைகளை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் டெனால்ட் ட்ரம் ஆய்வுசெய்து வருவதாக  அமெரிக்காவின் வெளிவிவகார செயலக வட்டாரங்கள் கடந்த புதன் கிழமை(22) தெரிவித்துள்ளன.

ஏமனின் பெரும் பகுதிகளை குதீஸ் அமைப்பினர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து தமது கட் டுப்பாட்டில் கொண்டுள்ளனர். ட்ரம்பின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த அறிவிப்பு ஏமனின் குதீஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்கான உதவிப் பணிகளைப் பாதிக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஜோ பைடன் அரசு அதனை 2021 ஆம் ஆண்டு நீக்கி யிருந்தது.

குதீஸ் அமைப்பினரை பயங் கரவாதிகளாக அறிவிப்பதற் கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சகத்தை ட்ரம் கேட்டுள்ளார். குதீஸின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க மக்களுக்கு ஆபத்தை விளைவிப்ப தாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காசா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து குதீஸ் அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது செங்கடல் பகுதிகளில் வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரையில் அவர்கள் 300 இற்கு மேற்பட்ட ஏவுகணைகளையும், ஆளில்லாத தாக்குதல் விமானங்களையும் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்’ மீதும் பல ஏவுகணைத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இதனிடையே காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குதீஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட கலக்ஸி லீடர் என்ற கப்பலின் பணியாளர்களை தாம் விடுவித்துள்ளதாக கடந்த புதன்கிழமை(22) குதீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.