எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தயாராகியுள்ளது.
சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக நினைவுகூர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் உணர்வுகளையும்,வலிகளையும் உலகுக்கு மட்டுமல்லாமல் தற்போதைய அரசாங்கத்திற்கும் எடுத்துக்கூறுவதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



