‘கோழிகளின் கால்கள் மற்றும் தலைகளை ஏற்றுமதி செய்ய சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
‘கடந்த அரசாங்கங்களிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற இலங்கையின் கோழிப்பண்ணைத் துறையினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர’ என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
‘கோழிப்பண்ணைத் துறையினர் சீனாவில் உள்ள வர்த்தகர்களுடனும் இது குறித்து விவாதித்துள்ளனர்’ ஏற்றுமதி செய்வதற்கான சட்டத் தடைகளை நீக்குமாறு அவர்கள் அரசாங்கங்களைக் கோரினர்.
எனவே நாங்கள் இதில் விரைவாகச் செயல்பட முடியுமாக இருந்தது’ என்று அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். இலங்கையில் கோழிகளின் கால்கள் மற்றும் தலைகள் நுகரப்படுவதில்லை, ஆனால் அவை கிழக்கு ஆசியாவில் பரவலாக நுகரப்படுகின்றன.
ஜனாதிபதி அனுர திசாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்தபோது கையெழுத்திடப்பட்ட 15 ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தமும் ஒன்றாகும்.



