‘இலங்கையில் தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று கைத்தொழில் துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ‘உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தவறியதால் நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது’ என்றும் அவர் கூறினார்.
ஏற்றுமதியாளர்கள் தேங்காய் உற்பத்தி இல்லாமல் தவிக்கின்றனர்.’ அரிசி பிரச்சினையைப் போலவே, தேங்காய் பிரச்சினையும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படாததால் எழுந்தது’ ‘அது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.”தேங்காய்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.” என்று கைத்தொழில்துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.



