வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந் நிலையில் மூன்று மாதகாலத்தில் வடமாகாண பிரதமசெயலாளரின் தலைமையில் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண பிரதிபிரதமசெயலாளர் எ.அன்ரன் யோகநாயகம் பதிலளித்துள்ளார்.
வவுனியாமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 02.01.2025 அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்திலேயே இவ்வாறு ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் பேசப்பட்டது.



