இலங்கை, இந்திய அரசுகள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை இறுதி செய்ய வேண்டும் – ரணில்

இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமக்குள்  நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை குறுகிய காலத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் முன்னோக்கிய பயணத்துக்கான முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சமாதான முன்னெடுப்புக்களே 2002 ஜனவரியில் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன. அதற்கான பேச்சுவார்த்தைகளின்போது அவர் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதோடு, சமாதான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.