மிக நீண்ட காலம் சிரியாவின் அதிபராக இருந்த பஷார் அஸாட் (Bashar Assad), அங்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். சிரியாவைப் பொறுத்தவரையிலும், மற்றும் பூகோள ரீதியாக மத்திய கிழக்கின் நிலையைப் பொறுத்த வரையிலும், ஒரு சகாப்தத்தின் முடிவாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு சிரிய மக்களுக்கு மட்டுமன்றி, அந்தப் பிராந்தியத்திலும், முழுப் பன்னாட்டுச் சமூகத்திலும் தாக்கம் செலுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கணிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் என்னவென்றால், மிகவும் செழுமையானதும் மிகப் பழமையானதுமான ஒரு கலாச்சாரத்தை சிரியா கொண்டிருப்பதே ஆகும்.
மிகப் புராதன பண்பாட்டைத் தன்ன கத்தே கொண்டிருக்கும் சிரியா, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கிறது. போர், அழிவுகள், பல மில்லியன்கள் எண்ணிக்கையில் நாட்டை விட்டு இடம்பெயர்ந்த மக்கள், உறுதியற்ற பொருண்மியம், மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் ஊடுரு வல் என இந்தச் சவால்களை நிரற்படுத்தலாம். பூகோள ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் பல சக்திவாய்ந்த நாடுகளின் போர்க்களமாக சிரியா மாறியிருந்தது.
உண்மையில் அஸாட்டின் பதவிவிலகல் ஒரு திருப்புமுனையாக அமை வதுடன், போர்ச்சக்கரத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு அந்த நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பாக இதனைக் கண்ணோக் கலாம்.இந்த நிகழ்வுக்கு பல்வேறு வகையான வியாக்கியானங்கள் வழங்கப்படலாம். ஒரு சாராருக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர் திருத்தம் மற்றும் நல்லிணக்கத்துக்கு ஏற்ற ஒரு காலமாகப் பார்க்கப்படலாம். இன்னொரு சாராருக்கு இது ஒர் நிச்சயமற்ற எதிர்காலத்தைச் சுட்டிநிக்கலாம்.
கடைசியாக சிரிய நாட்டு மக்களும் அந்த நாட்டின் அரசியல்வாதிகளும், வரலாறு வழங்குகின்ற இந்த அரிய வாய்ப்பை எப்படிக் கையாளப்போகிறார்கள் என் பதைப் பொறுத்தே அந்த நாட்டின் எதிர்காலம் அமையப் போகின்றது. இது எவ்வாறிருப்பினும், பேச்சுவார்த்தைகள், சீர்திருத்தங்கள், சமூகத்தை ஒன்றிணைக்கக்கூடிய ஒரு புதிய அரசாட்சி மாதிரி (new governance model) என்பன தற்போது அவசியமாகத் தேவைப் படுகின்றன.
இங்கு ஒரு விடயம் மட்டும் உறுதியாக இருக்கிறது. சிரியாவின் மிகவும் செழுமையான வரலாற்றை யாரும் எந்த விதத்திலும் மறந்துவிட முடியாது. எமது கண்முன்னே நாம் பார்க்கும் மாற்றங்கள் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக அமையலாம். கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கையினால் உந்தப்பட்டு, சிரியா வினால் உறுதித்தன்மையையும் செழிப்பையும் கண்டுகொள்ள முடியும்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஈரானுக்குப் பின்னடைவுஈரான் கொண்டிருக்கும் வெளியுறவுக் கொள் கையைப் பொறுத்தளவில், அஸாட்டின் பதவிவிலகல் அதற்கு ஒரு மிக முக்கியமான பின்னடை வாகும். தெஹ்றானைப் பொறுத்த வரையில், எதிர்ப்பு அச்சைக் (resistance axis) கருத்தில் எடுக்கும் போது, சிரியா அதற்கான ஒரு முக்கியமான நாடாக இருந்தது. பல நட்பு நாடுகளின் வலைப்பின்னலும், கூட்டுச் சக்திகளும் இணைந்து மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்கைக் குறைத்து,மத்திய கிழக்கில், ஈரானது செல்வாக்கை அதிகரிக்க உதவி யிருந்தன. இந்த மூலோபாயத்தை அதாவது, முழுப் பிராந்தியத்திலுமே தனது செல்வாக்கைச் செலுத்துதல் என்ற விடயத்தில் ஈரான் தற்போது பலவீனமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது.
பல தசாப்தங்களாக ஈரானின் மூலோபாய நட்புநாடாக சிரியா இருந்து வந்திருக்கிறது. ஆயுத விநியோகங்களுக்கான பாதையாகவும் அதே நேரம், லெபனானின் ஹிஸ்பொல்லாவுக்கு ஆதரவு வழங்கும் தளமாகவும் இருந்துவந்திருப்பது மட்டு மன்றி, மேற்கத்தைய நாடுகளுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அணிதிரட்டுவதற்கான அரசியல் தளத்தையும் ஈரானுக்கு சிரியா வழங்கியிருந்தது. இராணுவ விநியோகங்களை மேற்கொண்டும், இராணுவ நிபுணர்களையும், ஷியா முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த படைகளையும் அங்கு அனுப்பியும், சிரியாவில் 2011ம் ஆண்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமான காலத்திலிருந்து, பஷார் அஸாட்டுக்கான ஆதரவை வழங்குவதற்காக மிகவும் அதிகமான வளங்களை, சிரியாவில் ஈரான் முதலீடு செய்திருந்தது. எதிர்ப்பு அச்சைப் பொறுத்தவரையில் சிரியாவுடனான நட்பு ஈரானுக்கு முதுகெலும்பாக இருந்துவந்திருக்கிறது.
இவை எவ்வாறிருப்பினும், அஸாட்டின் பதவி விலகல், அதிகாரச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவதாக, மேற்கத் தைய நாடுகளுடனும், அத்துடன் ஏனைய அரபு நாடுகளுடனும், துருக்கியுடனும் உறவை வளர்த்துக்கொள்ளும் நோக்குடன், சிரியாவில் புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சிகள், ஈரானிலிருந்து தூர விலகிச்செல்லக்கூடும். இரண்டாவ தாக அஸாட்டின் விலகல், தனது நட்பு நாடுகளின் உறுதித்தன்மையைப் பேண உதவும் நாடு என்ற விம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளது. மேலும், சிரியாவில் ஈரானின் செல்வாக்கு பலவீனமடைந்தது குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஈரான் பேணிவந்த தானத்துக்கு ஆப்பு வைத் திருக்கிறது. சிரியாவின் ஆதரவில் ஈரான் அதிகமாகத் தங்கியிருந்தது. ஹிஸ்பொல்லா தற்போது பலவீனமான நிலைக்குச் சென்றிருக்கிறது. குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு முன்புபோல் இல்லை என்பதை அவதானிக்கும் இஸ்ரேலும், சிரியாவிலுள்ள ஈரானின் உட்கட்ட மைப்பின் மேல் அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம்.
நம்பிக்கைக்குரிய ஒரு நட்பு நாட்டின் இழப்புஈரானைப் பொறுத்தவரையில், நம்பிக்கைக்குரிய ஒரு நட்பு நாட்டை இழப்பது என்பது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அது அனுபவித்து வந்த செல்வாக்கை கணிசமான அளவு பாதித்திருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, உறுதியை ஏற்படுத்தும் நாடாக இல்லாமல், அதற்கு உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் ஒரு நாடாக, ஈரானைப் பார்க்கின்ற பல அயல்நாடுகளுடன் அதன் உறவு மோசமடைவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகமாகவே இருக்கின்றன.
சிரியாவில் அஸாட்டின் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் அண்மையில் அதிகரிக்கப்பட்ட போது, கடந்த சில நாட்களாக ஈரானைச் சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் நிலைமை தொடர்பாக பல தடவை தமது கருத்துகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். மிகவும் குறிப்பாக உக்ரேன் நாட்டின் மேல் அந்த அதிகாரிகள் முக்கிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கின்றனர். ஆளில்லா விமானங்களை எதிர்த்தரப்பிலுள்ள ஆயுதக்குழுக் களுக்கு வழங்கி, சிரியாவிலுள்ள அந்த எதித்தரப்பு ஆயுதக்குழுக்களுக்கு உக்ரேன் ஆதரவை அளித்து வந்திருக்கிறது என்று இஸ்லாமிய ஆலோசனைப் பேரவையின் தேசிய பாதுகாப்பு மற்றும் கொள்கைகளுக்கான குழுவின் பேச்சாள ரான இப்ராஹீம் றெஸாயெய் (Ibrahim Rezaei) குற்றஞ்சாட்டியிருக்கிறார். உக்ரேனால் வழங்கப் பட்ட ஆளில்லா விமானங்களின் காரணமாக சிரியாவிலுள்ள பயங்கரவாதிகளிடம் பலமான ஆயுதங்கள் தற்போது இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலைமையை உருவாக்கியதற்காக உக்ரேன் அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்று றெஸாயெய் வலியுறுத்தினார். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உக்ரேன் இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால், உக்ரேனின் அதிபர் விளாடிமீர் ஸெலென்ஸ்க்குச் சார்பான உக்ரேன் ஊடகங்கள் சில, ஈரானுக்கு எதிரான கருத்துகளை தமது ஊடகங்களில் பதிவுசெய்ததை வைத்து நோக்கும் போது, ஈரான் முன்வைக்கும் இக்குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம் என அறியமுடிகிறது.
ஹயாற் தாஹ்றீர் அல்-ஷாம் என்ற ஜிகாத் குழுவினருடன் (Hayat Tahrir al-Sham) உக்ரேனின் பிரதான புலனாய்வுத் தலைமையகம் தொடர்புகளை ஏற்படுத்தியதாக துருக்கியிலுள்ள முக்கிய ஊடகங்கள் செப்ரெம்பர் மாதத்தில் தகவல் வெளியிட்டிருந்தன. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு குழுவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள உக்ரேன் விரும்புவது தொடர்பாக அந்த ஊடகங்கள் தமது வியப்பை கோடிட்டுக்காட்டியிருந்தன. இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை உறுதிப்படுத்து வதற்காக உக்ரேனின் புலனாய்வுத் தலைமையகத் தின் அதிகாரி ஒருவர் மேற்குறிப்பிட்ட பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் உரை யாடும் ஒளிப்படத்தை தமது ஊடகங்களில் வெளி யிட்டிருந்தன.
துருக்கியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஓர் உயர்மட்ட ஆய்வில், உக்ரேன் புலனாய்வுத் தலைமையகத்தின் பிரதிநிதிகளுக்கும் துருக்கியில் உள்ள ஹயாற் தாஹ்றீர் அல்-ஷாம் என்ற ஜிகாத் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே பல்வேறு சந்திப்புகள் நடைபெற்றிருந்ததற்கான சான்றுகளைப் பெற்றிருந்தன.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப் படையில், கடந்த பல மாதங்களாக இவ்வாறான சந்திப்புகள் துருக்கியில், சிரிய எல்லைக்கு அருகில் நடைபெற்றதாக அறியக்கிடக்கின்றது.
குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஈரானுக்கு இருந்த செல்வாக்கை இல்லாதொழித்து, அஸாட்டின் படைகளுக்கு எதிரான செயற் பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக இரு சாராருக்கும் இருந்த ஆர்வம் தொடர்பாக இவ்வாறான சந்திப்புகள் நடைபெற்றிருக்கலாம் என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட இன்னும் பல நாடுகளினால் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்ட ஹயாற் தாஹ்றீர் அல்-ஷாம் என்ற ஜிகாத் குழுவின் ஈடுபாடு, துருக்கியில் வாழும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்கண்ட சாட்சிகள், சந்திப்புகளுக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்கள், பங்குபற்றியவர்கள் குறித்த இடங்களுக்குச் சென்ற பாதைகளை; போன்ற தரவுகளை வைத்தே குறிப்பிட்ட அமைப்பின் செயற்பாடு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், துருக்கிக்கும் உக்ரேனுக்கும் இடையேயுள்ள இரு தரப்பு உறவில் விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று இவ்விடயத்தை ஆய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உக்ரேன் உத்தி யோகபூர்வமாக எந்தவிதமான பதிலையும் இதுவரை வெளியிடவில்லை என்பதுடன் துருக்கியிலுள்ள பொதுமக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் இவ்வாறான செய்திகள் எதிர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கின்றன. இவ்வாறான கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவந்த சில நாட்களின் பின்னர் அவ்வாறான ஆக்கங்கள் அக்குறிப்பிட்ட ஊடகங் களிலிருந்து அகற்றப்பட்டன என்பன இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
நன்றி: rt.com