இஸ்ரேலினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் படுகொலை – ஊடக அமைப்பு கண்டனம்

இந்த வருடம் பணியில் இருந்த 18 ஊடகவியலாளர்கள் இஸ் ரேலினால் படுகொலை செய் யப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கடந்த வியாழக்கிழமை(12) வெளி யிட்ட தனது இந்த ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் கொல்லப்பட்ட 54 ஊடகவியலாளர்களுடன் ஒப் பிடும்போது இது மூன்றில் ஒரு பங்காகும். ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக பல ஸ்தீனம் மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 5 வருடங்களில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அங்கு ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போர் ஆரம்பித்ததில் இருந்து அங்கு 145 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் பணியில் இருக்கும் போது கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர் பில் எமது அமைப்பு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் 4 வழக்குகளை இது வரையில் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தானில் 7 ஊடகவியலாளர்களும், பங்களதேசம் மற்றும் மெக்சிகோவில் தலா 5 ஊடக வியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆண்டு உலகில் 104 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அரை பங்கு காசாவில் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்துலக ஊடகவிய லாளர்கள் கூட்டமைப்பு International Federation of Journalists (IFJ) தெரிவித்துள்ளது.

இரண்டு அமைப்புக்களும் தகவல்கள் வெவ்வேறு வழிகளில் திரட்டுவதால் இந்த வேறுபாடுகள் காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.