ஜனாதிபதியின் இந்திய பயணம் குறித்து இந்திய வெளிவிவகார பாதுகாப்பு ஆய்வாளர் கருத்து

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவை தனதுமுதலாவது வெளிநாட்டு பயணத்திற்கு தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம் என புதுடில்லியை தளமாக வெளிவிவகார பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆய்வாளர் சிறிபதி நாரயணண் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

இலங்கை ஜனாதிபதியின் விஜயம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று குறிப்பாக சமீபத்தைய தேர்தல்கள் முடிவுகள் காரணமாக .

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த விரும்பியதால் இந்தியாவிற்கான அவரது விஜயம் தாமதமானதுஇதற்போது அந்த தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவை தனதுமுதலாவது வெளிநாட்டு பயணத்திற்கு தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம்.ஏனைய நாடுகளிற்கு செல்வதற்கு முன்னர் அவர் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

இது இந்தியா அவருக்கு முன்னுரிமைக்குரிய விடயம் என்பதை காண்பிக்கின்றது.

மேலும் ஜனாதிபதி ஏகேடி ஜேவிபியுடன் தொடர்புபட்டவர் என்பதும் முக்கியம் .

ஜேவிபி இந்திய எதிர்ப்பு ஆயுதகுழு என்ற வரலாறுள்ளது,இந்த விஜயம் தனது கட்சியை மக்கள் பார்க்கும் விதத்தை அவர் மாற்றுகின்றார் என்பதை காண்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மக்கள் காலப்போக்கில் மாற்றமடையலாம் என்பதை காண்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பழமைவாத சிங்களவர்கள் பழமைவாதமற்ற சிங்களவர்கள் முஸ்லீம்கள் தமிழர்கள் உட்பட பல குழுக்களின் ஆதரவுடன் திசநாயக்க நாடாளுமன்ற தேர்தலில் தீர்க்கமான வெற்றியை பெற்றுள்ளார்.

இந்த குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாரம்பரிய கட்சிகள் இம்முறை மக்கள் ஆதரவை பெறவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் இலங்கை ஜனாதிபதி ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை,நாடளாவிய வாக்காளர்களின் நம்பிக்கையை  பிரதிநிதித்துவம் செய்கின்றார்.

ஜேவிபி தனது ஆதரவாளர் தளத்தினை வழமையான நிலைக்கு அப்பால் விஸ்தரித்துள்ளதால் ஜனாதிபதி முழு தேசத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார் இது ஜேவிபிக்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பொருளாதாரம் என்ற விடயத்தில்  பல கட்சிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாலும் மக்களின் நம்பிக்கையை இழந்ததாலும் அனுரகுமார திசநாயக்க வெற்றிபெற்றார்.

பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் உள்ளது,புதியதலைவர் இதனை மாற்றுவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கையை பொறுத்தவரை இந்த விஜயம் இந்தியா சீனா தொடர்பான உறவுகளில் பெரும் மாற்றத்தை வெளிப்படுத்தவில்லை.