காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்  குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’ நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு  முதல் ஹமாஸ் இயக்கத்தை ஒழிக்கும் விதத்தில்  இஸ்ரேல் காசாவில் தாக்குதலை நடத்தி வருகின்றது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய  தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் மீது   தாக்குதல் நடத்தியதில் மூன்று மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். இது அண்மையில் மருத்துவ கட்டமைப்பின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஐந்தாவது தாக்குதல் என கூறப்படுகிறது.