கடந்த 2024,செப்டம்பர்,21 நடைபெற்ற ஜனாதி பதி தேர்தலில. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9-வது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றார்.
அந்த சூட்டோடு சூட்டாக 2024, செப்டம்பர் 24, ல் பாராளுமன்றத்தை கலைத்து கடந்த 2024, நவம்பர்,11,ல் பாராளுமன்ற தேர்தலையும் நடத்தி முடித்தார் தான் எதிர்பார்க்காத அதிகூடிய 159, ஆசனங்களை பெற்று மிகவும் அதிகப்படியான ஆசனங்களுடன் பாராளுமன்றம் கூட்டப்பட்டு 23, அந்தஸ்த்துள்ள அமைச்சர்களையும் 29, பிரதி அமைச் சர்களையும் நியமித்து முதலாவது அக்கிராசன உரையையும் கடந்த 21, ம் திகதி நிகழ்த்திவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டியது தென்பகுதி யில் அவருடைய திசைகாட்டிக்கு ஏகப்பட்ட ஆதரவு அலை இருந்தது என்பதற்கு அப்பால் 76, வருடங்களாக தமிழின உரிமைக்காக சமஷ்டி அடிப்படையில் தீர்வை வேண்டியும், தமிழீழத் துக்கான ஆயுதப்போராட்டத்தையும் நடத்த 2009, மே,18, ம் திகதியுடன் போர் மௌனிக்கப்பட்டாலும் கடந்த 15, ஆண்டுகளாக அந்த வலி வேதனை சாதனை சோதனைகளை தாங்கி சர்வதேச ரீதியாக இனப்படுகொலைக்கான நீதியையும், சர்வதேச ரீதியாக அரசியல் தீர்வையும வேண்டி களத்திலும், புலத்திலும் அரசியல் செய்யும் தலைமைகளை உருவாக்கிய யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களும் எவரைமே எதிர்பார்க்காத விதமாக திசைகாட்டிக்கு அதிகப்படியான வாக்கு களை வழங்கி தமிழினத்தின் உணர்வுகளை திசை மாற்றியுள்ளனரா என்ற சந்தேகம் இன்று பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
அது உண்மையில் தமிழ்த்தேசிய தலைவர் கள் கடந்த 15, வருடங்களாக தமிழினத்தை ஏமாற்றியமைக்காக, மக்கள் மயப்படுத்தப்படாத அரசியலை வெறும் தேர்தல் அரசியலாக மட்டும் வருடங்களை கடத்தியதற்கும் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உட்கட்சி மோதல் கட்சிவழக்கு, தகைமை இல்லா தலைமை என்ற அதிருப்தியாலும் இலங்கையில் திசைகாட்டிக்கு இருந்த அலையை வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களும் அதனை சாதகமாக்கிகொண்டனர்.
ஆனால் யாழ்மாவட்ட மக்கள் அதிகூடிய வாக்குகளை திசைகாட்டிக்கு வழங்கி மூன்று ஆசனங்களை பெற்ற நிலையிலும் ஒரு திருப்திக் காகவேண்டியாவது ஒரு அமைச்சர் பதவி அல்லது பிரதி அமைச்சர் பதவி அங்கு வழங்கப்பட வில்லை.
ஆனால் கிழக்கு மாகாணம் பல பின்னடைவு களை சந்தித்தாலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் மீது அதிருப்தியை கண்டாலும் அநுராவின் திசைகாட்டியில் திசைமாறவில்லை வழமையாகவே எல்லாத் தேர்தல்களிலும் திருகோணமலையில் ஒரு ஆசனமும், அம்பாறையில் ஒரு ஆசனமும் மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களும் தமிழரசுக்கட்சிக்கு (தமிழ்தேசிய கூட்டமைப்பு) கிடைத்தது அது இந்த 2024, தேர்தலிலும் உறுதியானது.
இன்னும் சொல்வதானால் கடந்த 2020, பொதுத்தேர்தலில் அம்பாறையில் எந்த ஆசனமும் கிடைக்கவில்லை, மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்கள் மட்டுமே தமிழரசுக்கட்சிக்கு கிடைத்து பின்னடைவை சத்தித்தது அதை இந்த தேர்தல் இல்லாமல் செய்து பெருவெற்றிகண்டது உண்மை.
அதுவும் இலங்கை முழுவதும் உள்ள 21, தேர்தல் மாவட்டத்தில் சுணாமியாக திசைகாட்டி ஊடுரு வினாலும் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் மண் சார்ந்து எழுச்சி பெற்றுள்ளது என்பது இலங்கை வரைபடத்தில் தடம் பதித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நேற்றல்ல எப்போதும் தமிழ்த்தேசியத்தை விட்டு பெரும்பாலனவர்கள் விலகிச்சென்ற வரலாறுகள் இல்லை விகிதாசாரத்தேர்தல் 1989, அறிமுகமாகி 2024, வரை புள்ளிவிபரம்தை நோக்கினால் இது புரியும்.
- 1989, ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 55,141, வாக்குகளை பெற்று 03, ஆசனங்கள்,
- 1994,ம் ஆண்டு 76,516, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்கள்,
- 2000, ம் ஆண்டு 54,448, வாக்குகளைப்பெற்று 02,ஆசனங்கள்,
- 2001, ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவான பின்னர் 86,284,ஆசனங்களைப்பெற்று 03, ஆசனங்கள்.
- 2004,ம் ஆண்டு 1,61,011, வாக்குகளை பெற்று 04, ஆசனங்கள்,
- 2010, ம் ஆண்டு 66,235,வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்கள்
- 2015, ம் ஆண்டு 1,27,185, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்கள்,
- 2020, ம் ஆண்டு 79460, வாக்குகளை பெற்று 02, ஆசனங்கள்
- 2024,ம் ஆண்டு 96,975, வாக்குகளை பெற்று 03, ஆசனங்கள்….
யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் கடந்த 1994, ம் ஆண்டில் இருந்து 2020, வரை தொடர்ச்சியாக ஆளும்தரப்பில் தெரிவானவர்கள் டக்ளஸ் தேவானந்தாவாக இருக்கலாம் விஜயகலாவாக இருக்கலாம் தனி ஒருவராக தெரிவானாலும் தொடர்சியாக அமைச்சர்களாக வலம் வந்த வரலாறே யாழ்ப்பாணத்துக்கு இருந்தது. ஆனால் இம்முறைதான் ஒரே ஆளும்கட்சி யில் இருந்து மூன்று பேர் தெரிவாகியும் அவர்கள் அமைச்சு பதவி வழங்காமல் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இது திசைகாட்டிக்கு வாக் களித்தவர்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றமாகும்.
அடுத்ததாக ஜனாதிபதி அநுர குமார – திசாநாயக்காவின் அக்கிராசன உரையை ஆவலுடன் எதிர்பார்த்த வடகிழக்கு தமிழ்மக்களுக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அனைத்து கட்சிகளை சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருடைய உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியல் அமைப்புக்கான விடயம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நியாயம், பயங்கரவாதடைச் சட்டத்தை நீக்குவதற்கான யோசனை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் திட்டம் இவைகளை பற்றிய ஏதாவது கருத்தை கூறுவார் என எதிர்பார்கப்பட்டது இந்த விடயங்கள் எதையுமே அவர் கருத்தில் எடுக்காக உரையாகவே அவருடைய உரை அமைந்திருந்தது.
ஏதோ நாட்டில் கடந்த காலங்களில் ஊழலும், பொருளாதார நெருக்கடியும்,வறுமையும், மட்டுமே இருந்தது என்ற பாணியில்தான் அதனை தீர்ப்பதற்கான ஆலோசனை முன்னகர்கர்வுகளை செயல்படுத்துவதுதான் தமது தேசிய மக்கள் சக்தி அரசின் நோக்கம் என்ற வகையான கருத்தை மட்டுமே அவர் அன்று பேசியிருந்தார்.
அதைவிட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப் போவதாக அவருடைய கட்சியும்,அவரும் கடந்த காலங்களில் இருந்து அப்போதய ஜனாதிபதிகளை விரல் நீட்டி குற்றம் கூறியவர்கள், இப்போது ஜனாதிபதியாகி அவருடைய முதலாவது உரையில் அந்த விடயத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை.
இதில் இருந்து உணரக்கூடிய விடயம் எதுவெனில் கடந்த 1978ல், நிறைவேறிய புதிய அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக நிறை வேற்றப் பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகமாகி 1989, சனவரி ,2, ல் தெரிவான ஜே ஆர் ஜெயவர்தனா, 2 சனவரி 1989,ஐனவரி.2,ல் தெரிவான ஆர் பிரமதாசா அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் 1993,மே,2,ல் தெரிவா டீ வி விஜயதுங்கா, 1994, நவம்பர்,12, ல் தெரிவாகி தொடர்சியாக இரண்டுமுறை வெற்றி பெற்ற சந்திரிகா குமாரதுங்க, 2005, நவம்பர்.19 ல் தெரிவாகி அவரும் தொடர்ச்சியாக பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ஷ, 2015, ஜனவரி,8, ல் தெரிவான மைத்திருபால சிறிசேனா,2019,நவம்பர்,18,ல் தெரிவான கோட்டபாயராஷபக்ஷ அவரை தென் பகுதிமக்கள் ஆர்ப்பாட்டம் மூலம் நாட்டை விட்டு துரத்தியபோது 2022,யூலை,20,ல் அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவான ரணில் விக்கிரமசிங்கா ஆகிய எட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளுடன் தற்போது 2024,அக்டோபர்21,ல் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவான அனுரகுமார திசாநாயக்காவரை அனைவருமே இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் பௌத்தத்துக்கு அடிமையான இனவாத போக்கு டையவர்கள் என்பதில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்பதே நாம் கட்ட உண்மை.
தற்போது தெரிவான தேசிய மக்கள் சக்தி பழைய ஜே வி பி ஒரு இடது சாரி கொள்கை உடைய கட்சி என கூறப்பட்டாலும் தற்போது அது இடது சாரிக்கொள்கை மறந்த ஒரு கலப்பு கொள்கையுள்ள அரசாங்கமாகவே இது செய்படும் என்பதை அவருடைய அக்கிராசன உரை பறை சாற்றியுள்ளது.
கடந்த எட்டு ஜனாதிபதிகளின் உடை நடை பாவனை என்பன மட்டும் மாறி இருந்தாலும் அவர்களுடைய குணநலம் இனவாதம் மாறவில்லை என்பதே உண்மை. தற்போதய புதிய ஜனாதிபதியாக தெரிவான அனுர குமார திசநாயக்காவும் இதில் வேறுபடவில்லை அவரும் அந்த எட்டு ஜனாதிபதிக ளின் குணலம் கொண்ட ஒருவராகவே செயல் படவுள்ளார் என்பது அவரைடைய அக்கிராசன கன்னி உரை நிருபித்துவிட்டது.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசாரங்களில் பாராளுமன்றத்தை சுத்தம் செயவதாகவும், புதிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகவுமே அவர்களுடைய பிரசாரயுக்தி அமைந்திருந்தது அந்த மாற்றத்தின் அலையான தென்பகுதி சிங்கள மக்களை மட்டும் கவரவில்லை தமிழ் முஷ்லிம் மக்களையும் கவர்தது.
தமிழ்த்தேசிய விடுதலைக்கான போராட் டத்தை நடத்துவதற்கான வழிகாட்டியாக தலைவர் களை உருவாக்கிய யாழ்ப்பாண தமிழ் மக்களின் ஒருபகுதியினரையும் கவர்ந்து விட்டது.தற்போது பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய ஜனாதிபதி அனுராவின் தலைமையில் தெரிவான 159, பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தை மட்டும் சுத்தம் செய்யும் தும்புத்தடிகளாக செயல்படப்போகிறார்களா இல்லை நாட்டையும் சுத்தம் செய்யும் ஈக்கில் தடிகளாக செயல்படுவார்களா என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்.
தென்பகுதியில் இருந்து தெரிவானவர்கள் எப்படி இருந்தாலும், பறவாய் இல்லை வட கிழக்கில் இருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தும்புத்தடிகளாக மட்டும் இல்லா மல் யோக்கிய தடிகளாக செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் வடக்கு மகாணத்தில் யாழ்ப்பா ணத்தில் மூன்று ஆசனங்கள் திசைகாட்டிக்கு கிடைத்ததை ஆளும் தரப்பு மற்றும் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் பெருமையாக கூறினாலும் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெற்றால் அவர்களை யாழ்ப்பாணமக்கள் தோற்கடிப்பார்கள் என்பதே உண்மை.