டிசம்பர் 3 – சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக ஐநா சபையால் முன்னெடுக்கப்படுகின்றது.
உலகளவில் 15 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் இயலாமையை அனுபவிக்கின்றனர். இதில் 80 வீதமானவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுள் பார்வைக் குறைபாடு உடையோர், கை, கால் குறைபாடு உடையோர், செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர், மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோய் பாதித்தவர் மற்றும் குணமடைந்தவர் என்று ஐந்து வகையினர் உள்ளனர்.
இலங்கையில் கடந்த கால போரினால் மாற்றுத்திறனாளிகள் அதிகரித்த நிலைமையே காணப்படுகின்றது.
மேற்குலக நாடுகளோடு ஒப்பிடுமிடத்து இலங்கையில் அவர்களுக்கான செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் மாற்றுத் திறனாளிகள் அரசாலும் ஏனையவர்களாலும் ஒரம் கட்டப்படுகிறார்கள் என்பதே உண்மை.