தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!

IMG 20241121 WA0015 தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!

மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.

தமிழர் தாயகமான   வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது,

அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது,

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.