வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை!

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் அளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க, இன்னமும் விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘நாட்டு மக்களின் சுமைகளை குறைப்பதே தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது. வடக்கு மற்றும் மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்துள்ளனர். கடந்த கால அரசாங்கங்கள் இவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. இவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையானது நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும்’ என்றும் குறிப்ப்பிட்ட்டுள்ள்ளஅர்.