நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
- தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,061,915 (44 ஆசனங்கள்)
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,553,174 (11 ஆசனங்கள்)
- புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 385,622 (1 ஆசனம்)
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 257,808 (2 ஆசனம்)
- இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) – 132,971 (1 ஆசனம்)
- சர்வஜன அதிகாரம் (SB) – 129,568 – (0 ஆசனம்)
- ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) – 52,843 (0 ஆசனம்)
- வேறு கட்சிகள் – 629,180 (1 ஆசனம்)
தொகுதி ரீதியாக முதலில் அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள், பின்னர் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 15), மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய,
இலங்கை தமிழரசு கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
யாழ்.மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி,
தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 63,327 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 27,986 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
சுயேட்சைக் குழு 17 27,855 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி,
தேசிய மக்கள் சக்தி 368,229 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 133,041 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி,
தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 29,711 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,102 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி,
தேசிய மக்கள் சக்தி 452,398 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 128,932 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி 34,257 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.