இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4.00 மணியுடன் வாக்களிக்கும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 29 தேசியப் பட்டியல் பகிர்ந்தளிக்கப்படும்.
தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா
நுவரெலியா
முல்லைத்தீவு
திருகோணமலை
நீர்கொழும்பு
மன்னார்
மட்டக்களப்பு
கொழும்பு-வெள்ளவத்தை
அம்பாறை