தமிழ் மக்கள் இம்முறையும் இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி வாக்களிக்கவேண்டும்- கனடிய தமிழர் தேசிய அவை

தமிழ் மக்கள் இம்முறையும் ஒரு தேசமாக திரண்டு தமிழ்தேசிய இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி வாக்களிக்கவேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ் மக்கள் வழக்கமாக காலம்காலமாக இடம்பெற்றுவரும் தேர்தல்களில் தனிமனித நலனை முன்னிலைப்படுத்தாது தமிழ் தேசிய இனத்தின் கூட்டு நலனை முன்னிலைப்படுத்தி தமது வாக்குகளை செலுத்தி தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றார்கள்.

அதேபோன்று நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக திரண்டு 75வருடங்களிற்கு மேலாக இடம்பெற்றுவரும் மாபெரும் வீரமும் உயரிய தியாகமும் நிறைந்த விடுதலைப்போராட்டத்திற்கும் மத்தியில் இன்றும் ஓயாது தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்திற்கு வலுச்சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கன்றோம் என மேலும்  தெரிவித்துள்ளது.