
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் நடைபெற்றுள்ளன.
இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் நினைவுகூரப்படவுள்ள நிலையில், மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரால் இந்த சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நேற்றைய தினம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு, அதன் பின்னரே சிரமதானப் பணிகள் இடம்பெற்றன.



