தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு முகம்கொடுக்கும்வகையில் சிறப்புடன் செயற்பட்ட தினேஸ் என்ற இயக் கப் பெயரைக்கொண்ட சுப்பையா பரமு தமிழ்ச் செல்வன் அவர்கள் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரியில் 1967ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் 29ஆம் திகதி பிறந்து. தனது ஆரம்ப,இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்றார். முகத்தில் கோபம் என்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்டமாட்டார். எந்தநேரமும் சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கும் தமிழ்ச்செல்வன் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த் தைகளின்பொழுது காத்திரமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
1977களில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்ற இனத் துவேசத்தைக் கக்கிய வானொலி உரையைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களினால் முன்னெடுக்கப்பட்ட தமி ழின அழிப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதே போன்று 1983இலும் மிகப்பெரிய இன அழிப்பி லும்,பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல் லப்பட்டதுடன், பலர் அகதிகளாக வெளியேறினர். அந்தக் காலத்தில் சிங்கள அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் மற்றும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல், தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக்கும் வகையில் செயற்பட்டுவரும் நிலையில் 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட தமிழ்ச்செல் வன்,மற்றும் பல நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களுடன் இந்தியாவுக்குச்சென்று, அங்கு தமிழ்நாட்டில் வைத்து வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்று சிறந்த போர்ப் பயிற்சியாளராகத் திகழ்ந்தார். விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் மேதகு வே.பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார். தமிழகத்தில் இராணுவப் பயிற்சி களை முடித்துக் கொண்டதும், தினேஷ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டு அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணிப் போராளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் பல்வேறு தாக்குதல்களில் முன்னரங்கத்தில் நின்று போராடிப் பல வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார்.
அந்த ஆண்டு வடக்கில் ஆனையிறவு தளத்தை ஆக்கிரமிப்பதற்கான போரில் தமிழ் செல்வன் முக்கிய பங்கு வகித்தார், இது புலிகள் கெரில்லா தாக்குதல்களில் இருந்து வழக்கமான கெரில்லாத் தாக்குதல்களிலிருந்து மரபுவழிப் போர் முறைக்கு மாறியதைக் குறித்த ஒரு இராணுவ நடவடிக்கையாக இருந்ததால், ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நடவடிக்கையாகும். ஒக்டோபர் 1993 இல், பூநகரியின் அருகே இலங்கைப் படைகளு டன் போரிட்டபோது, தமிழ்செல்வன் காலில் பலத்த காயம் அடந்தார், அது கிட்டத்தட்ட அவரது போரிடும் வலிமையையும், இயக்கத்தையும் முடக்கியதுடன், அவரது கெரில்லா போர்முறை வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஆதனைத் தொடர்ந்து 1993 இலிருந்து வீரச்சாவடையும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றினார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார். அவரது ஆற்றல்கள் மிக்க பணிகளின் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அவரது அணுகுமுறையும் சிரித்த முகமும், தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர் களுக்கும் பிடித்திருந்ததால் வெளிநாடுகளில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் பொழுது, அவரை அதிகளவு நாடுகளுக்குச் சென்று வரவும் அனுமதித்திருந்தார். தினேஸ் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தமிழ்செல்வனைத் தனது மெய்ப்பாதுகாவலராகவும் பின்னர் இணைத்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலேயே, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதிநிதிகளை வரவேற்று உரையாடினார்.
1995ஆம் ஆண்டு அரசபடைகள் முன்னெடு த்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாகத் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்திரோபாய நடவடிக்கையாக தமிழ்ச்செல்வனும் ஏனைய விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும், பல இலட் சக்கணக்கான பொதுமக்களும் யாழ்ப்பாணத் திலிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 22இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தமிழ்செல்வன் கையெழுத்து இட்டபின்னர் அவர் தாய்லாந்து, நோர்வே, ஜெர்மனி மற்றும் ஜப்பானில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளின் சார்பில் கலந்து கொண்டார். 35,000 இலங்கை மக்களின் அழிவுக்குக் காரணமான, 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26இல் இலங்கையை மட்டும்லலாது,உலக நாடுகளையே உலுப்பி எடுத்த சுனாமிப் பேரழிவைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவிகளை வழங்கு வது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டுப் பெருமளவு நிதியையும் மக்களுக்காகப் பெற்றுக்கொடுத்தார்.
கேணல் கிட்டு யாழ்ப்பாணத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலத்தில் யாழ் குடாநாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த விடுதலைப் புலிகள் மிகச் சிறந்த நிர்வாக முறைமைகளை நடைமுறைப் படுத்திய வகை யில் தமிழ்ச்செல்வனுக்கும் கணிசமான பங்கு இருந்தது. இதனால் தேசியத்தலைவர் அவரை அரசியல் பிரிவின் பொறுப்பாளராக நியமித்தார். இந்தக் காலத்தில் மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்ட மற்றைய ஆயுதக் குழுக்களை மக்களுக்கு இனங்காட்டி மக்களின் ஆதரவுடன் ஓரங்கட்டினார்கள். 1991இல் இருந்து, யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் செயற் பட்டார்.1993இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த் தைக்குழுவில் தேசத்தின் குரல் அன்ரன் பால சிங்கத்துடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியையும் மேற்கொண்டு சிறப்புடன் செயற்பட்டு வந்தார்.
ஸ்ரீலங்காவுடனான போர்நிறுத்தம் நடை முறையில் இருந்தபொழுது,வடக்குக்கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள கல்வி வலயங்களிலும், வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிலும், கடமையாற்றும் தமிழ்,சிங்கள, முஸ்லிம் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களையும் கிளிநொச்சியில் இயங்கும் சமாதானச் செயலகத்தில் அழைத்து வடக்குக்கிழக்கு மாகாணத்தில் நிலவும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதனை நகர கிராமப்புற வேறுபாடுகள் இன்றி மேம்படுத்தவது தொடர்பாகவும் கலந்துரையாடியதைத் தொடர் ந்து இது தொடர்பாக ஆக்கபூர்வமாக அறிக்கை தயாரிக்கப்பட்டு அதனை நடைமுறைப் படுத்தும் வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டன. இதற்கான கால எல்லையும் நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய மதிய உணவு முடிந்தபின்னர் பொதுவான கலந்துரையாடல் இடம்பெற்றது. அப் பொழுது ஒரு முஸ்லிம் கல்விப் பணிப்பாளர் திரு.தமிழ்ச்செல்வனைப் பார்த்து, அண்ணை நாங்கள் வந்துநின்ற இரண்டு நாட்களிலும் வன்னியின் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்ப் பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக் கின்றீர்கள் அதற்கு முதலில் எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஆனால் நாங்கள்போன எந்த ஒரு இடத்திலும் கோயில்களிலோ,சந்தைகளிலோ எந்தஒரு பிச்சைக் காரர்களையும் நாங்கள் காணவில்லையே அவர்களை என்ன செய்திருக்கின்றீர்கள் அல்லது இங்கை பிச்சைக்காரர்களே இல்லையா…? என்று சிறிது தயக்கத்துடன் கேட்டதும்,திரு.தமிழ்ச் செல்வன் வழமையாகவே தனது அழகான முழுப் பற்களையும் காட்டிச் சிரிப்பதுபோல், அன்றும் சிரித்துக்கொண்டே, சேர்….இங்கையும் நிறையப் பேர் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருந்தவர்கள்…எங்களுடைய தலைவரின் ஏற் பாட்டில் அவர்களுக்கான காப்பகம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். தமிழீழ நிர்லாகத்தில் யாசகம் பெற்றுக் கையேந்தி நிற்கும்நிலை எவருக்கும் வரக்கூடாது என்ற தலைவரின் சிந்தனையிலேயே ஏதிலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.தமிழீழ அரசியல் துறை யின் நிர்வாகத்தின்கீழ் இந்தக் காப்பகம் செயற் படுகின்றது.அங்கே அவர்களுக்கான எல்லா வசதிகளையும் ஏற்படத்தி பொருத்தமான வேலைகளைச் செய்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படத்திக் கொடுத்திருக்கின்றோம்.அங்கே இருக்கும் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த வேலை களைச்செய்து உழைத்துச் சாப்பிடுகின்றார்கள்.அவர்கள் அங்கே சந்தோசமாகவும்,நிம்மதியாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பினால் அவர் களைப் போய்ப்பார்ப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து தருகின்றேன் என்று கூறியதன் மூலம் விடுதலைப் புலிகளின் தூரநோக்குச் சிந்தனையை அங்கிருந்தவர்கள் எல்லோரும் அறிந்து ஆச்சரியப்பட்டார்கள்….!
நோர்வேயின் அனுசரணையில் போர்நிறுத்த ஒப்பந்தம் (Cease Fire Agreement) நடை முறையில் இருந்த நான்கு ஆண்டுக ளாக விடுதலை புலிகள் எந்தவிதமான தாக்குதல்களையும் மேற் கொள்ளாது, போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு மதிப்புக் கொடுத்து வந்த நிலையில், 2007ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 2ஆம் திகதி காலை ஆறு மணியளவில் பிறிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிப் போராளிகளுடன் கிளி நொச்சியில் உள்ள சமாதானப் பணிமனையில் இருந்தபோது, சில இனத்துரோகிகளின் காட்டிக்கொடுப்பின் காரணமாக ஸ்ரீலங்கா விமானப் படையினரின் தாக்குதலில் அவர் தனது 40ஆவது வயதில் கொல்லப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இவர் வீரச்சாவடையும் போது,அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் கிளிநொச்சியிலேயே இருந்தனர்.
பிறிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி உரையின் ஒரு பகுதி:
”தமிழினம் இரு முனைப்போரை சந்திக் கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப் பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடு தலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத் தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றம்.” சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் இந்தக் கருத்து ஈழத் தமிழினம் எதிர் காலத்தில் சந்திக்கப் போகும் நெருக்கடிகளையும்,ஆபத்தக்களையும்,ஈழத்தமிழர்களின் விடயத்தில் உலகநாடுகளின் அணுகுமுறைகளையும் முன்கூட்டியே அறிந்து கொண்ட தமிழ்ச்செல்வனின் தீர்க்கதரிசனம் மூலம், 2009இல் இந்தியா,சீனா உட்படப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தமிழ் மக்களின் போராட் டத்தை நசுக்கியது என்பதை வெளிப்படுத்தியது.
வயது,அந்தஸ்து வேறுபாடுகள் எதுவுமின்றி மற்றவர்களை மதிக்கும் பண்பும், தலைக்கனம் இல்லாத பணிவும்,எல்லோரையும் அண்ணே என்று அழைக்கும் பணிவும் நிறையவே கொண்டிருந்த திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழினத்திற்குக் கிடைத்த ஒரு முதுசொம். அவரைப்போன்ற ஒரு தன்னலமற்ற மற்றும் தேசியத் தலைவரின் விசுவாசியாகச் செயற்பட்ட போராளியைப் பெற்றிருந்த ஈழத்தமிழர்கள் கொடுத்து வைத் தவர்கள்.அன்னாரின் வீரச்சாவு தமிழின வரலாற் றில் எப்பொழுதும் நிலைத்து நிற்கும்…., ஈழ விடுதலைப் போராட்டத்தில் கணிசமான பங்கை ஆற்றி வீரச்சாவடைந்த பிறிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்…….!