சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்திய வர்த்தகர்கள்

எல்லைப் பிரச்சினை தொடர் பான விவகாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உடன்பாடுகளை ஏற்படுத்துவதில் இந்திய வர்த்தகர் களே அதிக பங்கு வகித்ததாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட த புளும்பேர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹிமாலையா பிராந்தியத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் ஏற்பட்டு வந்த பிரச்சினை தொடர்பான தீர்வு உடன்பாடு இந்த வாரம் எட்டப்பட்டிருந்தது. அதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இந்த வாரம் ரஸ்யாவில் இடம் பெற்ற பிறிக்ஸ் நாடுகளின் கூட் டத்தில் கலந்துகொண்டபோது ஐந்த ஆண்டுகளின் பின்னர் சந்தித்து பேசியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு எல்லை யில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா மீது இந்தியா கொண்டு வந்த தடைகளை நீக்குமாறு இந்திய வர்த்தகர்களால் மோடி அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா வின் தடைகள் சீனாவை விட இந்தியாவுக்கே அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி யுள்ளன. குறிப்பாக மென்கடத்திகளின் வர்த்த கத்தை அது கடுமையாக பாதித்துள்ளது என நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்க ளில் 20 இந்தியப் படையினரும்இ 4 சீனப் படையினரும் கொல்லப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து சீனாவின் முதலீடுகள், மற்றும் அப்ஸ் போன்ற மென்பொருட்கள் மீது தடைகளை கொண்டுவந்த இந்தியா, சீன பயணிகளின் நுளைவு அனுமதிகளையும் தாமதப்படுத்தி வந்திருந்தது. இந்தியாவின் இந்த நடவடிக் கையால்  சீனாவின் மின்சாரக் கார்கள் செய்யும் BYD நிறுவனத்தின் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடும் இல்லாது போயுள்ளது.

தற்போது இந்தியா சீன பயணிகளுக்கான நுளைவு அனுமதியை விரைவு படுத்த திட்டமிட்டுள்ளது டன் சீனாவின் முதலீடுகளையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.