புதிய ஆட்சியாளருடன் இணைந்து தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படலாமா?

இலங்கையில் புதிய  ஜனாதிபதிப் பொறுப்பேற்றிருக் கும் நிலையில், பொருளாதார நெருக்கடி குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அத்தோடு தமிழ் மக்கள் முதன்மையாக, போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நியாயமான விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து நேர்மையான பதில், நில அபகரிப்புக்களைத் தடுத்தல் போன்றவற்றை முன்வைக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது யாழ்ப் பாணத்தில் 2ம் முறையாக பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்ட அ நுர குமார திச நாயக்க, ‘மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும்’ என்றார். ஆனால்  மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும்,  அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய பத்திரிகையாளர் சத்திய சிவராமன் அவர்கள், இந்த புதிய ஆட்சி மாற்றம் குறித்து குறிப்பிடுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ளது ஒரு புதிய ஆட்சி மாற்றம்   என்று  கூறினாலும், உண்மையை சொல்ல வேண்டும்என்றால்  இலங்கையை முழுமையாக ‘சிங்கள நாடு’ என்று தான்  கூறுகின்றார்கள்.   அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் சிங்கள மக்கள் மத்தியில் இந்த புதிய  ஆட்சி தெரிவாகியமைக்கு காரணம்,   பழைய ஆட்சியில் இருந்த ஊழல் ,  பொருளாதார நெருக்கடியைக் கூறலாம்.

மேலும் ஜே.வி.பி அமைப்பு ஆரம்பிக்கபடும் போது மக்களுக்காக தான்  ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமே அவர்கள் சிங்கள   இனவாதப் போக்கை  இன்னும் தீவிரமாக ஏற்றுக்கொண்டுள்ளமைதான்.

தேர்தல் காலங்களின் போது சிங்கள வேட் பாளர்கள் ஆட்சியமைக்க தமது இனத்தைச் சேர்ந்த பெருபான்மையின சிங்களவர்களின்வாக்குகளைத்தான்  முதன்மைப்படுத்துகின்றனர்.  தமிழ் மக்களின் வாக்குகளை அவர்கள் பெரிதாக கருதுவதில்லை. அ நுர அரசும் சிங்கள மக்களின் வாக்குகளைத்தான் முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது.

ஆக, புதிய ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களின் வாக்குகளையே பெரிதாக நம்புகின்றனர்.  ஆக இது கூட ஒரு இனவாத போக்குதான்.

அத்தோடு ‘நாங்களும் சிங்கள தேசிய இன வாதத்தை நம்புகின்றோம். ஆனால் அந்த சிங்கள தேசிய இன வாதத்திற்குள் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி  வழங்குவோம்’ என்று தான் அநுர அரசும் கூறி யிருக்கிறது.

அவர்களின் இந்தக்கருத்து தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. தமிழ் தேசிய பிரச்சினை, ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரைக்கும் இதில் பெரிய மாறுதல் வராது.

கடந்த காலங்களில் இருந்த  எந்த ஒரு அரசுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முற் படவில்லை. ஆனால் இதை காரணமாகக் கூறி, அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தை தமிழ்கட்சிகள் முழுமையாக ஆதரிக்கவும் கூடாது. முழுமையாக புறக்கணிக்கவும் கூடாது என்பது என்னுடைய கருத்து.

அத்தோடு  இந்த புதிய அரசோடு தமிழரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட தீர்மானிக்கும் பட்சத்தில், அவர்கள் ஒரு கோரிக்கையை  விடுக்கலாம். அதாவது குறைந்த பட்சம் போர்க்குற்றங்களுக்கான நியாயமான விசாரணை மற்றும்  காணாமல் ஆக்கப்பட்டாரோருக்கான நீதி என்பவற்றை முன் வைக்கலாம். எந்த விதமான கோரிக்கைகளையும் வைக்காமல் இணைந்து செயற்பட முற்படுவது ஆரோக்கிய மானது என்று கூற முடியாது.