இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜப்பான் தூதுவர் கருத்து

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பாராட்டியுள்ளார்.

இலங்கையின் சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் அமைதியான ஜனநாயகரீதியிலான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கொள்கைகளிற்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பிற்காக இலங்கையின் அரசியல்வாதிகள் பொதுமக்களிற்கு ஜப்பான் தூதுவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் உண்மையாகவே ஊக்கமளிக்கும் ஒன்று,ஜனநாயகரீதியிலான அமைதியான அதிகார மாற்றத்திற்காக மக்களும் அரசியல்வாதிகளும் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கும் ஒன்று,என தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர்நீங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள் அது உயிர்த்துடிப்பு மிக்க செழிப்பு மிக்க அமைதியான இலங்கையை உருவாக்குவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுஎன ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிப்பவையாக காணப்பட்டன,ஆட்சிமுறை சீர்திருத்தம்,ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்,அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி சர்வதேச ஒத்துழைப்பிற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் வலியுறுத்தினார்கள் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜப்பானிய தூதுவர் ஆட்சிமுறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.